வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை கட்டாயம் வேட்பாளர்களின் முகவர்களுக்கு தெரிவிக்க உத்தரவு தமிழகத்தில் வரும் 2ம் தேதி நடைபெற உள்ள

வேலூர், ஏப்.23: வாக்கு எண்ணும் பணிக்கு வரும் 2ம் தேதி வரும் அனைவரும் கட்டாயம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் 6ம் தேதி காலை 7 மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரை நடந்தது. பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாநிலம் முழுவதும் 73 மையங்களில் 24 மணி நேரம் 3 அடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பதிவான வாக்குகள் வருகிற 2ம்தேதி எண்ணப்படுகிறது. தேர்தல் பணிகள் தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் தற்போது கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால், கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதாசாகு அனைத்து மாவட்ட கலெக்டர்கள், எஸ்பிகளுடன், சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது, வரும் 2ம் தேதி வாக்கு எண்ணும் பணிக்கு வரும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை கட்டாயம் செய்ய வேண்டும். பரிசோதனை செய்தவர்களை மட்டுமே உள்ளே அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இதுகுறித்து தேர்தல் பிரிவு உயர்அதிகாரிகள் கூறியதாவது: ‘தமிழகத்தில் 73 இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அப்போது, தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போலீசார், வேட்பாளர்கள், வேட்பாளர்களின் முகவர்கள் அனைவரும் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்று முடிவு வர வேண்டும். கொரோனா பரிசோதனை செய்யாதவர்களுக்கு உள்ளே செல்ல அனுமதி இல்லை. 2ம்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக வருகிற 28ம் தேதி அன்று அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். முன்கூட்டியே அந்தந்த தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தங்களின் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை குறித்த தகவல் தெரிவிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரிசோதனை முகாம் எந்தந்த பகுதியில் நடத்துவது என்பது குறித்து சுகாதாரத்துறை சார்பில் ஆலோசனை நடத்திவிட்டு தெரிவிக்கப்படும்.

Related Stories:

>