கே.வி.குப்பம் சந்தை மேட்டில் தடையை மீறி நடந்த வாரச்சந்தையில் சமூக இடைவெளி இன்றி குவிந்த மக்கள் கொரோனா பரவும் அபாயம்

கே.வி.குப்பம், ஏப்.20: கே.வி.குப்பம் சந்தை மேட்டில் தடையை மீறி நடைபெற்ற வாரச்சந்தையில் கொரோனா அச்சத்தை மறந்து ஆயிரக்கணக்கணக்கில் மக்கள் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் தாலுகாவில் கே.வி.குப்பம் சந்தைமேடு மற்றும் லத்தேரி, வடுகன்தாங்கல் ஆகிய வாரச் சந்தைகள் மிகவும் பிரபலாமான வார சந்தைகளாகும். இங்கு காய் கறி, ஆடு, மாடு உள்ளிட்டவை படுஜோராக விற்பனை நடைபெறும். இந்நிலையில் கே.வி.குப்பம் வாரச்சந்தை திங்களன்றும், லத்தேரி வாரச்சந்தை ஞாயிற்றுக்கிழமையன்றும், வடுகன்தாங்கல் வார சந்தை புதன் கிழமை அன்றும நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில் கொரோனா 2ம் அலை காரணமாக கடந்த 10ம் தேதி முதல் ஒரு சில விதி முறைகளுடன் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மாவட்ட நிர்வாகமும், கே.வி.குப்பம், வடுகன்தாங்கல் மற்றும் லத்தேரி வாரச்சந்தைகளுக்கு மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிக தடை விதித்துள்ளது.

இந்நிலையில் நேற்று கே.வி.குப்பம் சந்தைமேடு பகுதியில் தடையை மீறி அதே இடத்தில் வாரச்சந்தை நடைபெற்றது. மேலும் வியாபாரிகள், பொதுமக்கள் என சுமார் ஆயிரக்கணக்கானோர் கொரோனா பரவல் அச்சமின்றி ஒரே இடத்தில் கூடினர். மேலும் சமூக இடைவேளி இல்லாமலும், முகக்கவசம் அணியாமலும் இருந்ததால் தொற்று வேகமாக பரவக்கூடிய அபாயம் உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>