மதுரை மருத்துவக்கல்லூரி மாணவருக்கு கொரோனா

மதுரை, ஏப். 20: மதுரை மருத்துவக்கல்லூரியில் 26 வயதான பயிற்சி மருத்துவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஏற்கனவே கடந்த வாரம் மருத்துவக்கல்லூரியில் பயோகெமிஸ்ட்ரி பிரிவில் பணியாற்றிய பெண் பேராசிரியருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் பயிற்சி மருத்துவருக்கு தொற்று உறுதியானதை தொடர்ந்து அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனை தொடர்ந்து மருத்துவக்கல்லூரியில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டன. மேலும் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ள சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

Related Stories:

>