பாலமேடு பேரூராட்சியில் பஸ்சில் மாஸ்க் அணியாத பயணிகளிடம் அபராதம்

அலங்காநல்லூர், ஏப். 20: பாலமேடு பேரூராட்சிக்குட்பட்ட பஸ்நிலையம் மற்றும் வாரச்சந்தை கூடும் இடங்களில் கொரோனா தொற்று தீவிரம் குறித்தும் சமூக இடைவெளி மற்றும்  பொது சுகாதாரத்தை பின்பற்றுவது குறித்து ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்படுகிறது. தொடர்ந்து பஸ்நிலையம் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் கை கழுவுவதற்கு சோப், மாஸ்க், கையுறை போன்ற தடுப்பு உபகரணங்கள் நகரும் பேரூராட்சி வாகனங்களில் வைத்து வழங்கப்படுகிறது. அதேபோல் மாஸ்க் அணியாதவர்களுக்கு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அபதாரம் வசூலிக்கப்பட்டது. வார்டு பகுதியில் நடைபெற்ற சுகாதார பணிகளில் பேரூராட்சி செயல் அலுவலர் தேவி, அலுவலக மேலாளர் அங்கயற்கண்ணி  உள்ளிட்ட சுகாதார பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories:

More