சேலத்தில் 101.3 டிகிரி வெயில்

சேலம், ஏப்.20:கத்திரி வெயில் துவங்குவதற்கு முன்பே, சேலத்தில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமான வெயில் கொளுத்தி வருகிறது. கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் குறைந்து காணப்பட்டது. மேலும், மாலை நேரங்களில் தொடர்ந்து மழையும் பெய்து வந்தது. இந்த நிலையில், மீண்டும் வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. சேலத்தில் நேற்று 101.3 டிகிரி ஃபாரன்ஹீட்டாக வெயில் பதிவானது. பகல் பொழுதில் நிலவிய வெப்பத்தால், இருசக்கர வாகனங்களில் சென்ற இளம்பெண்கள் முகத்தை துப்பட்டா, சேலையால் மூடிக்கொண்டும், கைகளில் கிளவுஸ் மாட்டிக்கொண்டும் பயணம் செய்தனர். கோடை வெயில் கொளுத்துவதால் நுங்கு, இளநீர், கம்பங்கூழ், கேழ்வரகு கூழ், தர்பூசணி பழச்சாறு, கரும்புச்சாறு போன்றவற்றின் விற்பனை அதிகரித்துள்ளது.

Related Stories:

>