உயர் அழுத்த மின்கோபுரம் அருகில் உடல் கருகிய நிலையில் வாலிபர் சடலம் மீட்பு

திருச்செங்கோடு, ஏப்.20: திருச்செங்கோடு அருகே உயர் அழுத்த மின் கோபுரம் அருகே, உடல் கருகிய நிலையில் வாலிபர் சடலமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே வெள்ளநல்லாம்பாளையம் பகுதியை சேர்ந்த தங்கவேல் என்பவருக்கு சொந்தமான நிலத்தில், உயர் அழுத்த மின்கோபுரம் உள்ளது. இதன் அருகே நேற்று சுமார் 35வயது மதிக்கத்தக்க ஆண் சடலம், உடல் கருகிய நிலையில் கிடந்தது. இது குறித்து தகவல் அறிந்த விஏஓ மாணிக்கம், திருச்செங்கோடு புறநகர் காவல் நிலைத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் கபிலன் தலைமையில், சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், சடலத்தை மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்து கிடந்த வாலிபரின் அடையாளம் எதுவும் தெரியவில்லை. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது மின் கோபுரத்தில் ஏறி தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். வாலிபர் மர்மமான முறையில் உடல் கருகிய நிலையில் இறந்து கிடந்த சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

>