சின்னாளபட்டி ஜிஹெச்சில் தீத்தடுப்பு விழிப்புணர்வு பிரசாரம்

சின்னாளபட்டி, ஏப்.19: சின்னாளபட்டி அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள் பொதுமக்களுக்கு ஆத்தூர் தீயணைப்பு நிலையம் சார்பில், தீ பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் தீயணைப்பு துறை சார்பாக தீ தொண்டு வாரவிழா நடைபெற்று வருகிறது. தீ பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு பிரசாரங்களை தீயணைப்பு துறையினர் செய்து வருகின்றனர். ஆத்தூர் தீயணைப்பு நிலையம் சார்பாக நிலைய அலுவலர் மோகன் தலைமையில் சின்னாளபட்டி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சிகிச்சைக்கு வந்த பொதுமக்களுக்கு தீ பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியினை செய்து காண்பித்தனர். ஆயில் மற்றும் எண்ணெய்களால் ஏற்படும் தீ விபத்துகள், மின்சாரம், எரிவாயு மூலம் ஏற்படும் தீ விபத்தின் போது தீயை அணைப்பது குறித்து செயல்விளக்கம் செய்து காண்பித்தனர். அதனுடன் எரிவாயு சிலிண்டர்களை பயன்படுத்தும் போதும், அதை வாங்கும் போதும் அதிலுள்ள குறியீடு எண்களை பார்வையிட்டு பயன்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர்.

Related Stories:

>