மேட்டூர் அணை பூங்காவுக்கு பார்வையாளர்கள் வருகை சரிவு

மேட்டூர், ஏப்.19: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, மேட்டூர் அணை பூங்காவிற்கு பார்வையாளர்கள் வருகை சரிந்தது. சேலம் மாவட்டத்தில் சுற்றுலா பயணிகள் கூடும் இடங்களில் மேட்டூர் அணையும் ஒன்று. நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள், இங்கு வந்து செல்வார்கள். வார விடுமுறை மற்றும் அரசு விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் வரத்து இருமடங்காக அதிகரிக்கும். ஆனால் தற்போது கொரோனா அச்சம் காரணமாக, மேட்டூர் அணை பூங்காவிற்கு சுற்றுலா பயணிகள் வரத்து சரிவடைந்துள்ளது. கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை மேட்டூர் அணை பூங்காவிற்கும், பவள விழா கோபுரத்திற்கும் 4,025 சுற்றுலா பயணிகள் வந்து சென்றுள்ளனர். இதன் மூலம் பார்வையாளர்கள் கட்டணமாக ₹20,125 வசூலிக்கப்பட்டது. ஆனால் நேற்று கொரோனா அச்சம் காரணமாக, 2,867 சுற்றுலா பயணிகள் மட்டுமே அணை பூங்கா மற்றும் பவள விழா கோபுரத்திற்கும் வந்துசென்றனர். இதன்மூலம் பார்வையாளர்கள் கட்டணமாக ₹14,335 வசூலிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரத்தை விட, இந்த வாரம் 1,158 சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்து போனது.

Related Stories:

>