திருவரங்குளத்தில் கழிவுநீர் தொட்டியில் விழுந்த பசு மாடு மீட்பு

புதுக்கோட்டை, ஏப்.18: புதுக்கோட்டை அடுத்த திருவரங்குளம் விஜய் என்பவரது வீட்டின் பின்புறம் உள்ள சுமார் 10 அடி ஆழமுள்ள கழிவுநீர் தொட்டியில் ஒரு பசுமாடு தவறி விழுந்தது. பொதுமக்கள் இதனை மீட்க போராடினர். ஆனால் முயற்சி தோல்வி அடைந்ததால் புதுக்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் கயிறுகள் மூலம் பசுமாட்டை பத்திரமாக மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.

Related Stories:

More
>