கேரளா, பண்ருட்டியில் இருந்து பலாப்பழம் வரத்து அதிகரிப்பு

சேலம், ஏப்.18: கேரளா மற்றும் பண்ருட்டியில் இருந்து சேலம் மார்க்கெட்டுக்கு பலாப்பழம் வரத்து அதிகரித்துள்ளது. மா, பலா, வாழை முக்கனியில் ஒன்றாக இருப்பது பலாப்பழம். தமிழகத்தில் பண்ருட்டி, புதுக்கோட்டை, விருத்தாசலம், கடலூர் உள்ளிட்ட பகுதிகளிலும், இதைதவிர கேரளாவில் பல பகுதிகளில் பலா மரங்கள் அதிகளவில் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் மார்ச், ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில், தமிழகத்தில் பல பகுதிகளிலும், இதைதவிர கேரளாவில் இருந்து அதிகளவில் பலாப்பழம் சேலம் மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு வரும். கடந்தாண்டை போலவே நடப்பாண்டும் கேரளாவில் பலாப்பழம் நல்ல விளைச்சல் தந்துள்ளது. அங்கிருந்து இருந்து நாள் ஒன்றுக்கு 10 டன் பலாப்பழம் விற்பனைக்கு வருகிறது.

சேலத்திற்கு விற்பனைக்கு வரும் பலாப்பழத்தை சேலம் மாநகரம், ஆத்தூர், வாழப்பாடி, மேட்டூர், ஓமலூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த தள்ளுவண்டி, கூடையில் வைத்து வியாபாரம் செய்யும் வியாபாரிகள் பழம் கணக்கில் வாங்கிச்சென்று சில்லரையில் விற்பனை செய்து வருகின்றனர். இதைதவிர பண்ருட்டி, ஏற்காட்டில் இருந்தும் பலாப்பழம் வரத்து இருந்து வருகிறது. ஒரு பலாப்பழம் ₹200முதல் ₹250 வரை விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories:

>