சாலையில் கழிவுநீர் ஓடுவதால் நோய் தாக்கும் அபாயம்

ஊட்டி,ஏப்.17: ஊட்டி மிஷனரி ஹில் பகுதியில் சாலையில் கழிவுநீர் ஓடுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்களுக்கு நோய் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஊட்டி நகராடசிக்குட்பட்ட மிஷனரி ஹில் பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். ஊட்டி நகரில் இருந்து மிஷனரி ஹில் பகுதிக்கு செல்லும் சாலையோரத்தில் கழிவு நீர் கால்வாய் உள்ளது. இந்த கழிவு நீர் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த பல நாட்களாக கழிவு நீர் சாலையில் ஓடுகிறது. இதனால், இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு கடும்துர்நாற்றம் வீசுவது மட்டுமன்றி நோய் தாக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதனை சீரமைக்க வேண்டும் என கடந்த பல நாட்களாக இப்பகுதி மக்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு புகார் தெரிவித்துள்ளனர். ஆனால், நகராட்சி நிர்வாகம் கண்டுக் கொள்ளாத நிலையில், தற்போது சாலை முழுவதும் கழிவு நீர் ஓடுகிறது. இதனால், இப்பகுதி மக்களுக்கு நோய் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, இதனை சீரமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories:

>