7 இடங்கள் கட்டுப்பாட்டு பகுதிகளாக மாற்றம்

ஊட்டி,ஏப்.12: நீலகிரி மாவட்டத்தில் தற்போது நாள் ஒன்றுக்கு 25 முதல் 30 வரை கொரோனா பாதிப்பு இருந்து வருகிறது. குறிப்பாக நேற்று முன்தினம் 33 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவரை நீலகிரி மாவட்டத்தில் 8,901 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 8,647 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 203 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 51 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனிடையே 3 பேருக்கு மேல் தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி புதுமந்து, கேரிகொம்பை, கெட்டிகொம்பை, எட்டின்ஸ் சாலை, கோடேரி, எம்.டி.,நகர், பாடந்தொரை உள்ளிட்ட 7 பகுதிகள் கட்டுப்பாட்டு பகுதிகளாக மாற்றப்பட்டுள்ளன.  இங்கு கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>