₹70.95 லட்சத்திற்கு காய்கறி விற்பனை

சேலம், ஏப்.12: சேலம் மாவட்டத்தில் சூரமங்கலம், தாதகாப்பட்டி, அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை, எடப்பாடி, இளம்பிள்ளை, மேட்டூர், ஜலகண்டாபுரம், ஆத்தூர், தம்மம்பட்டி, ஆட்டையாம்பட்டி ஆகிய 11 இடங்களில் உழவர்சந்தை செயல்பட்டு வருகிறது. நேற்று பங்குனி அமாவாசையையொட்டி, 11 உழவர்சந்தைகளிலும் அகத்திக்கீரை, கத்தரிக்காய், வெண்டைக்காய், புடலங்காய், அவரைக்காய், பூசணிக்காய், வாழைப்பழம், வாழை இலை உள்பட பலவகை காய்கறிகள் அதிகளவில் விற்பனை நடந்தது. 291 டன் 300 கிலோ காய்கறிகள் ₹ 70 லட்சத்து 95 ஆயிரத்திற்கு விற்பனையானது. இதை 66 ஆயிரத்து 110 நுகர்வோர்கள் வாங்கிச்சென்றனர். அதிகபட்சமாக சூரமங்கலம் உழவர்சந்தையில் 62 டன் காய்கறிகள் ₹14 லட்சத்துக்கும், தாதகாப்பட்டி உழவர்சந்தையில் 48 டன் காய்கறிகள் ₹11 லட்சத்து 70 ஆயிரத்திற்கும், ஆத்தூரில் உழவர்சந்தையில் 51 டன் காய்கறிகள் ₹11 லட்சத்து 52 ஆயிரத்திற்கும் விற்பனையானது. இதேபோல் சேலம் ஆனந்தா இறக்கம் காய்கறி மார்க்கெட், பால் மார்க்கெட், சின்ன கடைவீதி, ஆத்தூர், மேட்டூர் மற்றும் சேலம் மாவட்டத்தில் உள்ள காய்கறி கடைகளில் வழக்கத்தைவிட வியாபாரம் களைக்கட்டியது.

Related Stories: