தாவரவியல் பூங்காவை சுற்றி பார்க்க பேட்டரி கார் வசதியை ஏற்படுத்த கோரிக்கை

ஊட்டி,ஏப்.10: ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவிற்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்துச் செல்கின்றனர். இவர்களில், ஒரு சிலர் நடக்க முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். பல ஏக்கர் பரப்பளவை கொண்ட இப்பூங்காவை பார்வையிடவும், மேடான பாதையில் நடந்துச் செல்ல முடியாமலும் திணறி வருகின்றனர். அதுமட்டுமின்றி, மாற்றுத் திறனாளிகளும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.  

வயதானவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளில் பலர் பூங்காவை சுற்றி பார்க்காமலேயே ஏமாற்றுத்துடன் திரும்புகின்றனர். ஆண்டிற்கு பல ேகாடி வருவாய் ஈட்டும் இப்பூங்காவில் பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

ஆனால், இதுவரை பேட்டரி கார் போன்ற வசதிகள் செய்யப்படாமல் உள்ளது. பேட்டரி கார்கள் அறிமுகம் செய்தால், நுழைவு வாயில் பகுதியில் இருந்து இத்தாலியன் பூங்கா செல்லும் சுற்றுலா பயணிகள் மற்றும் இதர பகுதிகளுக்கு செல்லும் வயதான, மாற்றுத்திறனாளி சுற்றுலா பயணிகள் எளிதாக பூங்காவை சுற்றி பார்க்க முடியும் முடியும். பேட்டரி கார் வசதிகள் இல்லாத நிலையில், பலர் இத்தாலியன் பூங்கா, நீரூற்று போன்றவைகளை சென்று பார்க்க முடியாமல் போகிறது.

எனவே, சுற்றுலா பயணிகள் வசதிக்காக ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்காவில் பேட்டரி கார் வசதியை தோட்டக்கலைத்துறை ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: