திருநங்கை உள்பட 6 பேரை தாக்கிய கும்பல் நடவடிக்கை எடுக்க கோரி காவல் நிலையத்தில் மனு

சேலம், ஏப். 10:சேலத்தில் 6பேரை தாக்கிய கும்பல் மீது நடவடிக்கை எடுக்ககோரி திருநங்கைகள் போலீஸ் நிலையத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் அன்னதானப்பட்டி கருவாட்டுமண்டி பகுதியை சேர்ந்தவர் சுவேதா. (33). திருநங்கை. இவருடைய தம்பி பார்த்திபன். கடந்த 13ம் தேதி அதே பகுதியை சேர்ந்த 4 பேர் மதுபாட்டில் வாங்கி வரும்படி பார்த்திபனை அடித்தனர். இதில் காயமடைந்த பார்த்திபன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அன்னதானப்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் அதேபகுதியை சேர்ந்த சுரேஷ், உரிச்சகோழி என்ற வசந்த், அங்கமுத்து, புட்டு என்ற தமிழ்செல்வன் ஆகியோர் பார்த்திபனை தாக்கியது தெரியவந்தது. இதையடுத்து அந்த 4பேரையும் போலீசார் பிடித்து காவல்நிலையம் அழைத்து வந்தனர். பின்னர் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர். இதனிடையே கடந்த 5ம் தேதி பார்த்திபனின் வீட்டுக்கு சென்ற சுரேஷ் மற்றும் அவரின் கூட்டாளிகள், அங்கிருந்த திருநங்கை சுவேதா, பார்த்திபன், காயத்ரி, சாந்தி, சத்தியநாராயணன், பழனிசாமி ஆகியோரை கடுமையாக தாக்கி உள்ளனர். இதில் 5பேருக்கு காயம் ஏற்பட்டது.

இந்நிலையில் 20க்கும் மேற்பட்ட திருநங்கைகள் நேற்று அன்னதானப்பட்டி காவல்நிலையத்திற்கு வந்தனர். அவர்கள் சுரேஷ் மற்றும் அவரின் கூட்டாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் வலியுறுத்தி புகார் மனு கொடுத்தனர். அதன்பேரில் சுரேசை போலீசார் பிடித்து காவல்நிலையம் அழைத்து வந்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சேலத்தில் 101.9 டிகிரி வெயில்சேலம், ஏப்.10:தமிழகத்தில் கத்திரி வெயில் துவங்குவதற்கு முன்பே, சேலத்தில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் கொளுத்தி வருகிறது. கடந்த 31ம்தேதி உச்சபட்சமாக 109.7 டிகிரி வெயில் பதிவானது. நேற்று 101.9 டிகிரி ஃபாரன்ஹீட்டாக, இது உயர்ந்துள்ளது. நாளுக்குநாள் அதிகரித்து வரும் வெப்பநிலை காரணமாக பகல் பொழுதுகளில் கடைவீதிகளில் மக்கள் கூட்டமும் குறைவாகவே காணப்படுகிறது.

Related Stories: