தண்ணீர் பற்றாக்குறையால் மலை காய்கறி சாகுபடி குறைந்தது

ஊட்டி,ஏப்.9: நீலகிாி மாவட்டத்தில் பகல் நேரங்களில் வெயில் கொளுத்தி வரும் நிலையில் தண்ணீர் பற்றாக்குறை உள்ளதால் சரிவான பகுதிகளில் காய்கறி விவசாயம் மேற்கொள்வது குறைந்துள்ளது. நீலகிாி மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஜூலையில் தென்மேற்கு பருவமழை பெய்தது. அதன் பின் துவங்கிய வடகிழக்கு பருவமழை பொங்கல் பண்டிகை வரை நீடித்தது. இம்மழையால் குடிநீர் ஆதாரமாக உள்ள அணைகள், நீர் நிலைகள், குளங்கள், குட்டைகள் ஒரளவிற்கு நிரம்பின. அதன் பின் மழை பெய்யவில்லை. மாறாக உறைபனிப் பொழிவு மற்றும் பகல் நேரங்களில் வெயில் கொளுத்தி வருகிறது. வெயில் காரணமாக குடிநீர் ஆதாரங்களில் நீர் கொஞ்சம் கொஞ்சமாக குறைய துவங்கியுள்ளது.  

கிராம பகுதிகளில் பொது மக்களுக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கி வரும் நீர்நிலைகளிலும் தண்ணீரின் இருப்பு குறைந்துள்ளது. இந்த சூழலில் ஊட்டி சுற்று வட்டார பகுதிகளில் சரிவான பகுதிகளில் பருவமழையை நம்பியே பெரும்பாலான விவசாயிகள் விவசாயம் மேற்கொள்கின்றனர். பருவமழை சமயங்களில் கேரட், உருளைகிழங்கு உள்ளிட்ட காய்கறிகள் பயிரிடப்படுவது வழக்கம். நீராதாரம் உள்ள பகுதிகளில் மோட்டார் மூலம் காய்கறிகளுக்கு பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சப்படுவது வழக்கம். தண்ணீர் பற்றாகுறை உள்ள சமயங்களில் சாிவான பகுதிகளில் விவசாயம் மேற்கொள்வது இயலாதது. இந்த சூழலில் தற்போது கோடை காலம் என்பதால் வெயில் காரணமாக தண்ணீர் பற்றாகுறை ஏற்பட துவங்கியது. இதன் காரணமாக சரிவான பகுதிகளில் விவசாயம் ேமற்கொள்வது பல இடங்களில் குறைந்துள்ளது. நிலங்கள் தயார் செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ள நிலையில் கோடை காலத்தில் ஒரிரு நாட்கள் பெய்யும் கனமழையை எதிர்பார்த்து விவசாயிகள் காத்திருக்கின்றனர்.

Related Stories: