ஊட்டி,ஏப்.9: நீலகிரி மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளிலும் 2 லட்சத்து 82 ஆயிரத்து 623 ஆண் வாக்காளர்கள், 3 லட்சத்து 4 ஆயிரத்து 319 பெண் வாக்காளர்கள், 8 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 5 லட்சத்து 86 ஆயிரத்து 950 வாக்காளர் உள்ளனர். இதனிடையே கடந்த 6ம் தேதி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மூன்று தொகுதிகளில் பதிவான வாக்குகள் விவரம்: ஊட்டி சட்டமன்ற தொகுதியில் 98 ஆயிரத்து 690 ஆண்கள், 1 லட்சத்து 07 ஆயிரத்து 186, மூன்றாம் பாலினத்தவர் 6 பேர் என மொத்தம் 2 லட்சத்து 05 ஆயிரத்து 882 பேர் உள்ளனர். இதில் 1 லட்சத்து 39 ஆயிரத்து 626 வாக்குகள் பதிவாகியுள்ளது. 69 ஆயிரத்து 232 ஆண்களும், 70 ஆயிரத்து 394 பெண்களும் வாக்களித்துள்ளனர்.
கூடலூர் சட்டமன்ற தொகுதியில் 92 ஆயிரத்து 366 ஆண்களும், 96 ஆயிரத்து 789 பெண்களும் என 1 லட்சத்து 89 ஆயிரத்து 155 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 1 லட்சத்து 36 ஆயிரத்து 496 வாக்குகள் பதிவாகியுள்ளன. 67 ஆயிரத்து 398 ஆண்கள், 69 ஆயிரத்து 98 பெண்களும் வாக்களித்துள்ளனர்.