கோவை, மார்ச் 15: கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில், போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் பையா என்ற ஆர்.கிருஷ்ணன், நேற்று தனது தொகுதிக்கு உட்பட்ட முக்கிய பிரமுகர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்.
தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியின் கோவை தொகுதி எம்.பி. பி.ஆர்.நடராஜன், மார்க்சிஸ்ட் கம்யூ., கோவை மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மாநில செயல் தலைவரும், கோவை தெற்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளருமான மயூரா ஜெயக்குமார் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளிடம் ஆதரவு திரட்டினார்.