மியான்மர் கடலில் ரோஹிங்கியா அகதிகளை ஏற்றிய படகுகள் மூழ்கி 500 பேர் பலி

சிட்னி: ரோஹிங்கியாக்கள் என்பவர்கள், வங்காளதேசத்தின் எல்லையை ஒட்டியுள்ள மியான்மரின் ராகைன் மாநிலத்தில் வசிக்கும் முஸ்லிம் சிறுபான்மையினர் ஆவர். அவர்கள் அகதிகளாகப் படகுகள் மூலம் ஆபத்தான முறையில் பிற நாடுகளுக்குத் தப்பிச் செல்ல முயன்று வருகின்றனர். இந்நிலையில் மியான்மர் ராக்கைன் மாநிலத்தில் இருந்து ஜூன் மாத இறுதியில் 250 பேருடன் ஒரு படகு புறப்பட்டது.

அந்த படகு புறப்பட்ட சில மணி நேரங்களில் தொடர்பை இழந்தது. அதன் பின்னர் சுமார் 280 பேருடன் புறப்பட்ட இரண்டாவது படகு கடந்த 8-ம் தேதி மியான்மரின் அயேயார்வாடி கடற்கரைக்கு அருகில் கடலில் மூழ்கியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த இரு படகுகள் விபத்தில் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து இருக்கலாம் என அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories: