வாஷிங்டன்: நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளுக்காக பிரேசில் இறக்குமதிகளுக்கு 25 சதவீத வரி விதிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இது வரும் 22ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகம், ஓராண்டாக நடத்திய விசாரணையை தொடர்ந்து, உலகின் 10வது பெரிய பொருளாதாரமான பிரேசில் பலவிதமான நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளை கொண்டிருப்பதாக அறிவித்தது. இந்நிலையில், பிரேசிலில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரி வரும் ஜூலை 22ம் தேதி முதல் அமல்படுத்தப்படும்.
