நியூசிலாந்து: நியூசிலாந்தின் தென் தீவுப் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.3ஆக பதிவானது. டீ அனாவ் நகருக்கு அருகில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கத்தால் கடலோரப் பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்கள் உடனடியாக உயரமான இடங்களுக்கு செல்ல அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது.
