திருச்செந்தூர் கோயில் வளாகத்தில் சென்னை பக்தர் சாவு

திருச்செந்தூர்: சென்னை ஆவடியைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி(80). இவர் தனது மனைவி, மகன் தனசேகரன் ஆகியோருடன் நேற்று பகலில் திருச்செந்தூர் கோயிலில் தரிசனம் செய்துள்ளார். பின்னர் மதியம் அன்னதானத்தில் சாப்பிட்டுள்ளார். தொடர்ந்து அன்னதான மண்டபத்தில் இருந்து வெளியே வந்த கோவிந்தசாமி, கோயில் வளாகத்தில் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

உடனடியாக அவரை திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர், மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக தெரிவித்தார். கோயில் வளாகத்தில் பக்தர் இறந்ததால் நேற்று மாலை 3 மணி முதல் சுமார் அரை மணி நேரம் கோயில் நடை அடைக்கப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

Related Stories: