கோயில் சொத்தை அபகரிக்கும் முயற்சிக்கு முற்றுப்புள்ளி: பிரேமலதா வலியுறுத்தல்

சென்னை: தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா வெளியிட்ட அறிக்கை: பழனி கோயிலின் ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை மோசடியாக விற்பனை செய்ய முயன்றது அதிர்ச்சியளிக்கிறது. இந்த முறைகேட்டில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்து, நீதிமன்றத்தின் மூலம் உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும்.

மேலும், முறைகேடாக பதிவு செய்யப்பட்டுள்ள அந்த நிலத்தை மீட்டு, மீண்டும் பழனி தண்டபாணி சுவாமி மடத்தின் வசம் ஒப்படைக்க வேண்டும். தமிழகத்தில் கோயில் சொத்துகள் மற்றும் பொதுச் சொத்துகளை அபகரிக்கும் முயற்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பதிவு மற்றும் வருவாய்த் துறைகளில் கூடுதல் கண்காணிப்பு மற்றும் சீர்திருத்தங்களை செயல்படுத்த வேண்டும் என கூறியுள்ளார்.

 

Related Stories: