கவுண்டம்பாளையம் தொகுதி அமமுக வேட்பாளர் அறிவிப்பு

பெ.நா.பாளையம், மார்ச் 14:   கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி அமமுக வேட்பாளராக மேட்டுப்பாளையம் அருகே உள்ள கெம்மாரம்பாளையம் பண்ப்பாளையம் புதூரை சேர்ந்த எம்.அருணா (40) அறிவிக்கப்பட்டுள்ளார். எம்.சி.ஏ., எம்.பி.ஏ., முதுகலை சைபர் க்ரைம் சட்டம் படித்துள்ளார். நாயுடு சமுதாயத்தை சேர்ந்தவர். தகவல் தொழில்நுட்ப துறையில் பிரபல நிறுவனங்களில் 4 ஆண்டும், இலண்டன் நகரில் 2 ஆண்டும் பணிபுரிந்துள்ளார். தற்போது, கோவையில் உள்ள சமூக சேவை நிறுவனத்தில் 5 ஆண்டுகளாக சமூக சேவை பணியாற்றி வருகிறார்.

Related Stories: