சென்னை: சென்னை வந்த லண்டன் விமானத்தில் பறவை மோதியதால் 2 மணி நேர ஆய்வுக்கு பின் லண்டன் விமானம் ரத்து செய்யப்பட்டது. லண்டன் செல்ல இருந்த 202 பயணிகள் ஹோட்டல்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். முழு ஆய்வுக்கு பின்னே விமானம் இயக்கப்படும் என்று பிரிட்டிஷ் ஏர்வேஸ் தெரிவித்துள்ளது.
