தருமபுரி அருகே வெவ்வேறு இடங்களில் 2 பேர் கொலை

தருமபுரி: தருமபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி அருகே வெவ்வேறு இடங்களில் 2 பேர் கொலை செய்யப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பொப்பிடி கிராமத்தில் ஒரே கிணற்றில் இருந்து வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதில் சகோதரரர்கள் இடையே பிரச்சனை ஏற்பட்டதில் செந்தில்அரசு என்பவர் சுத்தியலால் தாக்கியதில் தனலட்சுமி உயிரிழந்தார். மாரண்டஹள்ளி அருகே சீரண்டபுரம் கிராமத்தில் விவசாயி மாதேஷை வழிமறித்து கத்தி, பீர்பாட்டிலால் குத்தி கொன்றனர். தனலட்சுமி, விவசாயி மாதேஷ் கொலை சம்பவங்களில் தொடர்புடைய 3 பேருக்கு போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: