நந்தா பொறியியல் கல்லூரியில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஈரோடு, மார்ச். 13: ஈரோடு நந்தா பொறியியல் கல்லூரியில் இந்திய தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து சார்பில் உறுதிமொழி ஏற்பு மற்றும் கையெழுத்திடும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஈரோடு வருவாய் கோட்ட அலுவலர் சைபுதீன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வருகிற சட்டமன்ற தேர்தலில் மக்கள் அனைவரும் தவறாமல் ஓட்டுப்போடுவதால் ஏற்படும் நன்மைகளையும், அதற்கான உறுதிமொழியையும் மாணவர்கள், புறமுதல்வர்கள், துறைத்தலைவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் எடுத்துக்கொண்டார். பின்னர்,  இந்திய  தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தின் சார்பில் வைக்கப்பட்டுள்ள பெரிய அளவிலான பதாகையில் நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் கையெழுத்திட்டனர். இந்நிகழ்வில் வருவாய் வட்டாட்சியர் பாலசுப்பிரமணியம், நில வருவாய் ஆய்வாளர் அமிர்தலிங்கம் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் சரவணன், பாலசுப்பிரமணியம்,  ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் தலைவர் சண்முகம், செயலர் நந்தகுமார் பிரதீப்,  நந்தா கல்வி நிறுவனங்களின் செயலர் திருமூர்த்தி, முதல்வர் ரங்கராஜன், முதன்மை நிர்வாக அலுவலர் ஆறுமுகம், தொழில்நுட்ப வளாகத்தின் இயக்குனர் செந்தில் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: