சேலம்: சேலம் மாநகராட்சிக்கான குடிநீர் விநியோகத் திட்டம் சூயசை சேர்ந்த தனியார் நிறுவனத்திற்கு தரப்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சியில் மேட்டூர் அணையில் இருந்து தொட்டில்பட்டி நீரேற்று நிலையம் மூலம் தினமும் 155 எம்எல்டி தண்ணீர் எடுக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், சேலம் மாநகரம் முழுவதும் 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் வகையில், தனியார் நிறுவனம் மூலம் குடிநீர் வழங்கும் திட்டத்திற்கு, தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
சேலம் மாநகரில் இத்திட்டத்தினை செயல்படுத்தும் வகையில் தற்போதுள்ள குடிநீர் சம்பந்தமான உட்கட்டமைப்பு வசதிகள் முதல் வருடத்தில் ஆய்வு செய்யப்படும். அடுத்த நான்கு ஆண்டுகளில் குடிநீர் திட்டம் சார்ந்த பணிகளை ரூ.1035.61 கோடியில் தனியார் (சூயஸ்) ஒப்பந்த நிறுவனம் மேற்ெகாள்ளும். அடுத்த 25 ஆண்டுகளுக்கு இத்திட்டத்தின் தொடர் பராமரிப்பு பணிகள் ரூ.3259.73 கோடியில் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தனியார் நிறுவனத்திடம் நகராட்சி நிர்வாகத்துறை மூலம் ஒப்பந்தம் போடப்பட்டு, அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.
சேலம் மாநகராட்சியில் தனியார் நிறுவனம் மூலம் குடிநீர் வழங்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என கடந்த மாதம் நடந்த மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் அனைத்து கவுன்சிலர்களும் எதிர்ப்பு தெரிவித்து பேசினர். இதையடுத்து மேயர் ராமச்சந்திரன், தனியார் நிறுவனம் மூலம் குடிநீர் வழங்கும் திட்டத்தை ரத்து செய்து தீர்மானம் நிறைவேற்றினார். இருப்பினும், தற்போது சேலம் மாநகரில் தனியார் நிறுவனம் மூலம் குடிநீர் வழங்கும் திட்டத்திற்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
இது சேலம் மாநகர மக்கள் மட்டுமன்றி பல்வேறு சமூக மேம்பாட்டு அமைப்புகள் மத்தியிலும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தவெக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். கவுன்சிலர்கள் கூறுகையில், சேலம் மாநகராட்சி சார்பில் ஆண்டுக்கு ரூ.50 கோடி, குடிநீர் விநியோகத்திற்கு செலவிடப்பட்டு வருகிறது.
ஆனால் தனியார் மூலம் குடிநீர் வழங்கும் திட்டத்துக்கு ஆண்டுக்கு மாநகராட்சி ரூ.200 கோடி கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மாநகராட்சியின் பட்ஜெட்டே ரூ.1000 கோடி தான். இதில், தனியாருக்கு ரூ.200 கோடி கொடுத்து விட்டால், மீதியுள்ள தொகையில் அடிப்படை வசதிகளை செய்ய முடியாத நிலை வந்து விடும். இத்திட்டத்தால் டெபாசிட், குடிநீர் கட்டணம் அதிகரிக்கும். ஒரு லிட்டர் தண்ணீர் பிடித்தால் கூட காசு தான்.
தற்போது மாதம் ரூ.151 குடிநீர் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. தனியாரிடம் சென்றால் மாதம் குறைந்த பட்சம் ரூ.1500 குடிநீர் கட்டணம் கட்டும் நிலை ஏற்படும். தண்ணீர் பிடிக்கப்படுவதற்கு ஏற்ப குடிநீர் கட்டணம் உயரும். துக்கு எதிரானது. இத்திட்டத்தை செயல்படுத்த கூடாது. இதற்காக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்’ என்றனர். என்றார்.
