கொல்கத்தாவில் கட்டிடம் இடிந்து 4 தொழிலாளர் பலி

கொல்கத்தா: கொல்கத்தாவின் தாரதலா, டிரான்ஸ்போர்ட் டெப்போ சாலையில் சியாமா பிரசாத் முகர்ஜி துறைமுகத்திற்கு சொந்தமான இடத்தில் கிடங்கு கட்டப்பட்டு வருகிறது. கட்டுமான பணிகள் நடந்து வந்த நிலையில், நேற்று மதியம் மேற்கூரை இடிந்து விழுந்ததில் அங்கு வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் பலர் சிக்கி கொண்டனர்.

இது குறித்து தகவல் கிடைத்ததும், போலீஸ், பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து இடிபாடுகளை அகற்றி அதில் சிக்கி கொண்டவர்களை மீட்டனர். இதில் மீட்கப்பட்ட 21 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த விபத்தில் 4 பேர் பலியாகினர். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள சிலரின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது என டாக்டர்கள் தெரிவித்தனர்.

Related Stories: