போராடும் மாணவர்களை பயங்கரவாதிகள் என்பதா? ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கார்கே கண்டனம்

புதுடெல்லி: காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தன் எக்ஸ் பதிவில், “தொண்ணூறு முறை வினாத்தாள்கள் கசிந்துள்ளன. இதனால் லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் சீரழிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு வினாத்தாள் கசிவால் 20 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். பல குடும்பங்கள் நிலைகுலைந்து போயுள்ளன.

ஆனால் மோடி அரசின் கல்வி அமைச்சரான தர்மேந்திர பிரதான் தனது பதவியை விடாமல் ஒட்டி கொண்டுள்ளார். அதேசமயம், ஒன்றிய அரசின் கல்வி முறைகேடுகளுக்கு எதிராக போராடும் மாணவர்கள் கொடுக்கும் பேட்டிகளை, பயங்கரவாதிகளின் குரல் என்று முத்திரை குத்துகிறார்.

நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேசும்போது, விவசாயிகளை அவமதிக்கும் விதமாக, அவர்களை போராட்டத்தை வாழ்வாதாரமாக கொண்டவர்கள் என்றும், ஒட்டுண்ணிகள் என்றும் சொன்னதை நாடு இன்னும் மறக்கவில்லை. இந்த அரசாங்கத்தை கேள்வி கேட்கும் யாரும் தேச விரோதிகள் என அழைக்கப்படுகிறார்கள். அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்” என கூறியுள்ளார்.

Related Stories: