சென்னை: சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் 300 அரசு பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதற்கு டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் 3வது நாளாக 300 பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. போக்குவரத்து கழகத்துக்கு கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்திய செயலில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை தேவை என்று டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
