சென்னை: பிரதிநிதிகள் அல்லாத யாரும் பள்ளிகளில் இனிப்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கக்கூடாது என்று மேயர் பிரியா கூறியுள்ளார். மாநகராட்சி பள்ளிகளில் வெளி நபர்கள் உள்ளே சென்று மாணவர்களுக்கு இனிப்பு, உணவு வழங்குவதாக புகார் வந்துள்ளது . தலைமையாசிரியர் அனுமதியின்றி பள்ளிகளில் யாரும் இனிப்பு உள்ளிட்ட உணவுப் பொருட்கள் வழங்கக்கூடாது. மக்கள் பிரதிநிதிகளாக இருந்தாலும் கூட பள்ளி தலைமை ஆசிரியரிடம் அனுமதி பெற வேண்டும் என்று மேயர் பிரியா குறிப்பிட்டுள்ளார்.
