சென்னை: தமிழ் இலக்கிய உலகிலும், தமிழ்த் திரையிசை வரலாற்றிலும் தனி முத்திரை பதித்து நூற்றாண்டு காணும் கவியரசு கண்ணதாசனுக்கு எனது புகழ் வணக்கங்கள் என முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார். கவியரசு கண்ணதாசன் பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் தெரிவித்துள்ளதாவது;
தமிழ் இலக்கிய உலகிலும், தமிழ்த் திரையிசை வரலாற்றிலும் தனி முத்திரை பதித்து நூற்றாண்டு காணும் கவியரசு கண்ணதாசன் அவர்களுக்கு எனது புகழ் வணக்கங்கள்.
மனித வாழ்வின் உணர்வுகளையும், தத்துவச் சிந்தனைகளையும், சமூக விழிப்புணர்வையும் தனது படைப்புகளின் மூலம் எளிய தமிழில் தந்து அனைவரின் மனங்களிலும் நீங்கா இடம் பிடித்தவர் கவியரசு கண்ணதாசன்.
காலங்களைக் கடந்தும் தலைமுறைகளை வழிநடத்தும் இலக்கியப் பொக்கிஷங்களாக அவரது படைப்புகள் திகழ்கின்றன.
தமிழ்மொழி உள்ளவரை கவியரசரின் புகழும் படைப்புகளும் என்றும் நிலைத்திருக்கும்” என தெரிவித்துள்ளார்.
