வரும் 26ம் தேதி புறநோயாளிகள் பிரிவு இயங்காது: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை அறிவிப்பு

புதுச்சேரி: மொஹரம் பண்டிகையை ஒட்டி வரும் 26ம் தேதி புறநோயாளிகள் பிரிவு இயங்காது என புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்:
ஒன்றிய அரசு விடுமுறை தினமான 26.06.2026 (வெள்ளிக்கிழமை) அன்று மொஹரம் பண்டிகையை முன்னிட்டு ஜிப்மர் வெளிப்புற நோயாளி பிரிவுகள் இயங்காது. எனவே இந்த தேதியில் நோயாளிகள் வருவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். எனினும் அவசரபிரிவு சேவைகள் அனைத்தும் வழக்கம் போல் இயங்கும். என கூறப்பட்டுள்ளது.

Related Stories: