கெங்கவல்லி தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு ஆலோசனை

கெங்கவல்லி, மார்ச் 9: கெங்கவல்லி (தனி) சட்டமன்ற தொகுதியில், 351 வாக்குச்சாவடிகள் உள்ளது. தொகுதி முழுவதும் தேர்தல் தேதி அறிவித்த நாள் முதல் பறக்கும் படை, நிலை கண்காணிப்புக் குழு, வீடியோ கண்காணிப்பு குழு, செலவின கண்காணிப்புக்குழு உள்ளிட்ட பல்வேறு குழுக்களை அமைத்து தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு கெங்கவல்லி தாலுகா அலுவலகத்தில், கெங்கவல்லி தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் வெங்கடேசன், முருகையன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில் அனைத்து அலுவலர்களும், கெங்கவல்லி சட்டமன்ற தொகுதி முழுவதும் தீவிரமாக தணிக்கையில் ஈடுபடவேண்டும். அரசியல் கட்சி கொடிகள் காரில் இருந்தால் அகற்ற வேண்டும், தலைவர்கள் வருகையின் போது அனைத்து நிகழ்வுகளையும் வீடியோவில் பதிவு செய்யவேண்டும் உள்ளிட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டன. கூட்டத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் தேர்தல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: