குன்னம் அருகே பெண்ணிடம் 6 பவுன் நகை திருட்டு

 

குன்னம், ஜூன் 22: குன்னம் அருகே பெண்ணிடம் 6 பவுன் தங்க நகை திருட்டு மர்மநபர்களை போலீசார் வலைவீசி ேதடி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள மருவத்தூரில் கோயில் தேர் திருவிழாவிற்கு குரும்பாபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் நைனப்பன் மனைவி வளர்மதி(45) தேர் திருவிழாவில் சாமி கும்பிபட சென்றார். அப்போது அன்னதானத்தில் உணவு சாப்பிட்டு விட்டு அமர்ந்து இருந்த போது கழுத்தில் கிடந்த 6 பவுன் தங்க நகை காணவில்லை. இதைகண்டு வளர்மதி அதிர்ச்சியடைந்தார். மருவத்தூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிவிடிவி காட்சிகளை வைத்து தங்க செயின் திருடிச் சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories: