குன்னம் தாசில்தார் அலுவலகத்தில் ஜமாபந்தியில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கல்

 

குன்னம், ஜூன் 19: பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் 50க்கும் மேற்பட்டவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.
குன்னம் வட்டத்தில் கடந்த 16ம்தேதி வடக்கலூர் பிர்காவிற்கு உட்பட்ட கிராமங்களுக்கு ஜமாபந்தி நடைபெற்றது நேற்று முன்தினம் கீழப்புலியூர் பிர்காவிற்கு உட்பட்ட கிராமங்களுக்கு ஜமாபந்தி நடைபெற்றது நேற்று குன்னம் தாசில்தார் அலுவலகத்தில், பெரம்பலூர் தனித்துணை ஆட்சியர் சபாதி சுந்தரராமன் தலைமையில், வரகூர் குறுவட்ட பகுதிக்கு உட்பட்ட ஓலைப்பாடி கிழக்கு, ஓலைப்பாடி மேற்கு, பரவாய் மேற்கு, பரவாய் கிழக்கு, புதுவேட்டக்குடி, துங்கபுரம் வடக்கு, துங்கபுரம் தெற்கு, காடூர் வடக்கு, காடூர் தெற்கு, கொளப்பாடி, வரகூர், குன்னம், பெரியம்மாபாளையம், பெரியவெண்மணி மேற்கு மற்றும் பெரியவெண்மணி கிழக்கு ஆகிய கிராமங்களுக்கு நடைபெற்ற வருவாய் தீர்வாயத்தில் பொதுமக்கள் தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 244 மனுக்களை அளித்தனர். ஜமாபந்தியில் குன்னம் தாசில்தார் சின்னதுரை நில எடுப்பு தாசில்தார் கோவிந்தம்மாள் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: