தத்ரூபமாக இருந்ததால் மக்கள் வியப்பு கிறிஸ்தவ பேரவை வலியுறுத்தல் நீதிமன்றத்தில் உள்ள நூலக அறைகளை திறக்க கோரி தஞ்சை வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

தஞ்சை, மார்ச் 9: நீதிமன்றங்களை உடனடியாக திறக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தஞ்சாவூரில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சாவூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கீழமை நீதிமன்ற வழக்கறிஞர் சங்க கூட்டு நடவடிக்கை குழு துணைத் தலைவர் நல்லதுரை தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மூத்த வழக்கறிஞர்கள் சிவசுப்பிரமணியன், அமர்சிங், தஞ்சாவூர் வழக்கறிஞர் சங்க செயலாளர் கீர்த்திவாசன், இணை செயலாளர் முல்லை உள்ளிட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில், கொரோனா தொற்று பரவலை காரணம் காட்டி மூடப்பட்ட கீழமை நீதிமன்றங்களில் உள்ள வழக்கறிஞர்கள் அறை, நூலகம் ஆகியவற்றை உடனடியாக திறக்க வேண்டும். சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞர்கள் அறையை மூடக்கூடாது. அரசு வழக்கறிஞர்கள் தவிர இதர வழக்கறிஞர்கள் நீதிமன்றங்களில் வாதாட அனுமதிப்பதில்லை என்ற முடிவை கைவிட வேண்டும். வழக்கு விசாரணைகளை காணொலி மூலம் நடத்தாமல் நேரில் நடத்த வேண்டும்.

நீதிமன்ற பணியாளர்கள், வழக்கறிஞர்களுக்கும் கொரோனா தடுப்பூசியை போட வேண்டும். கொரோனாவால் ஓராண்டு காலம் முடங்கிய அனைத்து நீதிமன்றங்களையும திறக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

Related Stories: