ஆதிபூமிநாதருக்கு சிறப்புயாக பூஜை

பொன்னமராவதி, மார்ச் 8: பொன்னமராவதி அருகே தேரடி மலம்பட்டியில் உள்ள ஆதிபூமிநாதருக்கு வாஸ்து தினத்தை முன்னிட்டு சிறப்பு யாகபூைஜைகள் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள தேரடி மலம்பட்டி கிராமத்தில் மலைமேல் ஆதிபூமிநாதர் (வாஸ்து ஆலயத்தில்) நேற்றுமுன்தினம் (சனிக்கிழமை) வாஸ்து தினத்தை முன்னிட்டு காலை 9 மணி முதல் சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து ஆதிபூமிநாதருக்கு 11 வகையான அபிஷேக ஆராதனைகள் மற்றும் 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. சுற்று வட்டார பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.

Related Stories: