காஞ்சிபுரம் ஜூன் 15: தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் நேற்று முன்தினம் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. அதன்படி காஞ்சிபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் இரவு நேரத்தில் திடீரென கனமழை செய்ய தொடங்கியது. கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கன மழை பெய்தது.
இதில், காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதிகள், ஒலிமுகமது பேட்டை, காஞ்சிபுரம் அருகே உள்ள திம்மசமுத்திரம், கீழம்பி, சிறுகாவேரிப்பாக்கம், பாலு செட்டி சத்திரம், தாமல், விஷார், விப்பேடு, செவிலிமேடு, ஐயங்கார் குளம், ஓரிக்கை, களக்காட்டூர், தேனம்பாக்கம், நத்தப்பேட்டை, கருக்குப்பேட்டை, ஏனாத்தூர், வையாவூர் களியனூர், காரை, பரந்தூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்தது. கடும் வெயிலில் அவதிப்பட்ட பொதுமக்கள் கனமழையால் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
