தீயணைப்பு துறை சார்பில் தீ பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருப்போரூர், ஜூன் 8 : தீயணைப்பு துறை சார்பில் வாங்க கற்றுக் கொள்வோம் என்ற தீ பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. காலவாக்கம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையத்தில் வாங்க கற்றுக் கொள்வோம் பொதுமக்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தீ பாதுகாப்பு அறிவோம் உயிர்களை காப்போம் தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்போது, காலவாக்கம் நிலைய அலுவலர் துரைராஜ் கலந்து கொண்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற பொதுமக்களுக்கு தீயணைப்பு பாதுகாப்பு மற்றும் உயிர்களைப் பாதுகாப்பது குறித்தும் விளக்கம் அளித்தார். மேலும் நிகழ்ச்சியில் பாதுகாப்பு உபகரணங்கள் காட்சிப்படுத்தி வைக்கப்பட்டு கலந்து கொண்ட பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

 

Related Stories: