கோயில் நிதி மாயம் விவகாரத்தை அடுத்து அயோத்தி நிலம் கையகப்படுத்துவதிலும் முறைகேடு:அகிலேஷ் யாதவ் பரபரப்பு புகார்

லக்னோ: அயோத்தியில் ராமர் கோயில் கோடிக்கணக்கான காணிக்கை பணம் மாயமானதாக சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் சமீபத்தில் குற்றம் சாட்டினார். இதையடுத்து ராமர் கோயில் காணிக்கை பணம் கையாடல் நடந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணை குழுவை உபி அரசு அமைத்துள்ளது.

இந்த நிலையில், ராமர் கோயில் அமைந்திருக்கும் அயோத்தியில் நிலங்களை கையகப்படுத்துவதிலும் முறைகேடுகள் நடந்துள்ளன என்று அகிலேஷ் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். அகிலேஷ் நேற்று கூறுகையில், அயோத்தியில் நடைபெறும் நில அபகரிப்பு சம்பவங்கள் மற்றும் முறைகேடுகள் குறித்த புகார்கள் தொடர்ந்து அரசின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டு வந்தது. உள்ளூர் மக்களும் கட்சித் தொண்டர்களும் எதிர்க்கட்சியினருடன் தகவல்களைப் பகிர்ந்துள்ளனர். பலர் தங்களது நிலங்களை இழந்துவிட்டனர். நிலம் கையகப்படுத்துதல் மற்றும் வீடுகள் இடிக்கப்படுதல் தொடர்பான விவரங்களை பாதிக்கப்பட்டவர்கள் வழங்குமாறு கேட்டு கொள்கிறோம். இதன் மூலம் அப்பிரச்சனைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல முடியும் என்றார்.

Related Stories: