தமிழகத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள் ; பதற்றமின்றி இருக்கும் முதல்வர் – தவெக அரசுக்கு Total Fail Mark தான்

சென்னை: தவெக அளித்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற சுமார் ரூ.1 லட்சம் கோடி தேவைப்படும் என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறி இருக்கிறார். அதே போல பயிர் கடன் முழுவதுமான தள்ளுபடி செய்யப்படும் என வாக்குறுதி அளித்துவிட்டு, ரூ.75,000 வரை தள்ளுபடி செய்யப்படும் என கூறுவது சரியல்ல. பெண்களுக்கு மாதந்தோறும் அறிவித்தபடி ரூ.2,500 உடனடியாக வழங்கிட வேண்டும் என்றும் தமிழிசை வலியுறுத்தி உள்ளார். ஒன்றிய அரசை காரணம் காட்டாமல் தமிழக அரசு திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.

தவெக ஆட்சியில் பெண்களின் பாதுகாப்பு விவகாரம் மிகவும் மனவேதனையை அளிக்கிறது. பெண் குழந்தைகள் பாதுகாப்பில் முதல்வர் விஜய் மவுனமாக இருக்கிறார். சிங்கப்பெண் படை இருந்தும் கூட, பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்பது முதல்வர் விஜய் கண்களுக்கு தெரியவில்லையா! என கேள்வி எழுப்பி உள்ளார். குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வரும் சூழலில், இது குறித்த பதற்றம் அல்லது போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எண்ணம் முதல்வருக்கு இருப்பதாக தெரியவில்லை.

நடப்பதை எல்லாம் பார்த்தால் பெண்களை பாதுகாக்காத ஒரு அரசுக்கு என்ன மார்க் கொடுக்க முடியும்! ஒரு மாத தவெக ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பில் ரிப்போர்ட் கார்ட் கொடுக்க வேண்டுமானால் Total Fail Mark தான் கொடுக்கலாம். பெண்களை மரியாதையாக நடத்தாத சமூகத்தை நிச்சயம் மதிக்க முடியாது என்றார். பெண்களைக் கசக்கிப் போடும் ஓநாய்கள் உலா வருவது, தமிழக அரசு அமைத்த ‘சிங்கப்பெண் அதிரடிப் படைக்கு’த் தெரியவில்லையா?” என்று தமிழிசை சௌந்தரராஜன் ஆவேசமாகக் கேள்வி எழுப்பியுள்ளார். முந்தைய அரசின் திட்டங்களை நிறைவேற்றாமல் இருப்பதற்கான சாக்கு போக்காக வெள்ளை அறிக்கை இருக்க கூடாது என்றும் குறிப்பிட்டு உள்ளார்.

Related Stories: