சிறுநீரக பிரச்னைகளுக்கு சிறப்பு முகாம்

சேலம், மார்ச் 7: சேலம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து சீலநாயக்கன்பட்டி பைபாஸ் செல்லும் சாலையில் காவேரி மருத்துவமனை உள்ளது. திருச்சியை தலைமையிடமாக கொண்டு, தமிழகம் முழுவதும் கிளைகளை கொண்டுள்ள சேலம் காவேரி மருத்துவமனையில், மார்ச் 1ம் தேதி முதல் சிறுநீரக பிரச்னைகளுக்கான சிறப்பு பரிசோதனை முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாமில் பங்கேற்பவர்களுக்கு சிறுநீரகம் சம்மந்தமான ரத்த பரிசோதனைகளும், வயிறு ஸ்கேன் பரிசோதனையும், சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணரின் ஆலோசனையும் வழங்கப்படுகிறது. இவை அனைத்தும் ₹750க்கு மட்டுமே அளிக்கப்பட்டு வருகிறது. மார்ச் 1 முதல் இது நாள் வரை, சுமார் 75க்கும் மேற்பட்டவர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயனடைந்துள்ளனர். இந்த முகாம் வரும் மார்ச் 31ம் தேதி வரை மருத்துவமனையில் நடைபெறும். இதில், பொதுமக்கள் பங்கேற்று பயன்பெறலாம் என சேலம் சீலநாயக்கன்பட்டி காவேரி மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.   ...

Related Stories:

>