ஹஜ் யாத்திரை சென்ற முதல் குழுவினர் 417 பேர் சென்னை திரும்பினர்

 

சென்னை: புனித ஹஜ் பயணம் சென்றுவிட்டு, முதல் குழு நேற்று காலை தனி விமானத்தில் சென்னை திரும்பியது. முதல் குழுவில் வந்த 417 பயணிகளை தமிழ்நாடு சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஷாஜகான் வரவேற்றார்.
இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:இந்த ஆண்டு தமிழ்நாட்டில் இருந்து 6,295 பேர் ஹஜ் யாத்திரை சென்றனர். ஹஜ் பயணிகள் வசதிக்காக சென்னை விமான நிலையம் அருகே ரூ.40 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் ஹஜ் இல்லம் வரும் 2027ம் ஆண்டு செயல்பாட்டிற்கு வரும். அதற்கு தகுந்தாற் போல், ஹஜ் இல்லம் கட்டுமான பணிகளை துரிதப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. புதிய வக்பு சட்டத்தை தமிழ்நாட்டில், ஏற்கனவே அரசு செயல்படுத்தவில்லை. இப்போது இந்த அரசும் இனிமேலும் அமல்படுத்தப்பட மாட்டாது.

இந்தியாவில் எந்த மாநிலத்திலும் புதிய வக்பு சட்டம் அமல்படுத்தப்படவில்லை. அந்த வகையில், தமிழகத்தில் இதுவரை அமல்படுத்தவில்லை. இனிமேலும் அமல்படுத்தப்பட மாட்டாது. புதிய சட்ட விதிப்படி முஸ்லிம் அல்லாத ஒருவர், வக்பு வாரியத்தில் உறுப்பினராக நியமிக்கப்படுவதை தமிழகத்தில் இதுவரை அமல்படுத்தப்படவில்லை. இனிமேல் அது அமல்படுத்தப்படவும் மாட்டாது. உமீத் போர்டில் வக்பு சொத்துகளை பதிவேற்றம் செய்ய பல்வேறு சிக்கல்கள் இருப்பதால், அதை பதிவேற்றம் செய்வதில் பல சிக்கல் ஏற்பட்டுள்ளன. வக்பு சொத்துகளை பதிவேற்றம் செய்யும் காலக்கெடும் நிறைவடைந்த நிலையில், அதை மறுபரிசீலனை செய்ய காலக்கெடுவை மேலும் நீடிக்க, மத்திய அரசிடம் கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதுகுறித்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட உள்ளன.
இவ்வாறு அமைச்சர் ஷாஜகான் கூறினார்.

 

Related Stories: