செல்போன் டவர் மீது ஏறி பெண் தற்கொலை மிரட்டல்

 

 

துரைப்பாக்கம்: நீலாங்கரை, சிவன் கோயில் தெருவை சேர்ந்த உஷா (40) என்பவர், மனநலம் பாதித்த மகனுடன் வாடகை வீட்டில் வசிக்கிறார். இவர், சில மாதமாக வாடகை கொடுக்காததால் வீட்டின் உரிமையாளர் வீட்டை காலி செய்ய கூறி உள்ளார். கால அவகாசம் வழங்க வேண்டி நேற்று முன்தினம் நீலாங்கரை போலீசில் உஷா புகார் அளித்தார். போலீசார், 8 மாதமாக வாடகை கொடுக்காததால் வீட்டை காலி செய்து கொடுங்கள், என எழுதி வாங்கியதாக கூறப்படுகிறது. வீட்டுக்கு சென்றபோது, உஷாவுக்கும் வீட்டு உரிமையாளருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று அக்கரை பகுதிக்கு சென்ற உஷா, அங்குள்ள செல்போன் டவர் மீது ஏறி, வீட்டு உரிமையாளர் அடித்ததாக கூறி தற்கொலை மிரட்டல் விடுத்தார். தகவலறிந்து வந்த போலீசார் சமாதானம் பேசியும் அவர் கீழே இறங்கவில்லை. பின்னர், திருவான்மியூர், துரைப்பாக்கம் தீயணைப்பு வீரர்கள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டபோது மேலும் உயரமான இடத்திற்கு சென்று மிரட்டல் விடுத்தார். 3 மணி நேர போராட்டத்திற்கு பின் உஷாவை பாதுகாப்பாக கீழே இறங்கினர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

 

Related Stories: