கடை முன் பேனர் வைத்த தகராறு பெண் நிர்வாகி தற்ெகாலை விசிகவினர் சாலை மறியல்

 

தண்டையார்பேட்டை: பழைய வண்ணாரப்பேட்டை மொட்டை தோட்டம் 1வது தெருவில், மாலை கடை நடத்தி வருபவர் லலிதா (52). இவர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உறுப்பினராக உள்ளார். இவரது கடைக்கு எதிரே நிர்மலா என்பவரும் மாலை கடை நடத்தி வருகிறார். நிர்மலா கடை அருகே, லலிதா சார்பில் விசிக பேனர் வைத்ததாக கூறப்படுகிறது. இதனால், தனது கடைக்கு இடையூறு ஏற்படுகிறது, என நிர்மலா, சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், வண்ணாரப்பேட்டை உதவி ஆணையர் விசாரணை நடத்த உத்தரவிட்டார். இதையடுத்து, இரு தரப்பினரையும் அழைத்து விசாரணை நடத்தினர்.

இதனிடையே, நிர்மலா தரப்பினர் தகாத முறையில் பேசியதால், மன உளைச்சலில் லலிதா கரையான் மருந்து குடித்துள்ளார். அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை அவர் உயிரிழந்தார். இந்நிலையில், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை கோரி, லலிதாவின் உறவினர்கள் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்தவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். வண்ணாரப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர்.

 

Related Stories: