மேம்பாலத்தில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை

திருப்பூர்: கோவை குனியமுத்தூரை சேர்ந்தவர் பையாஸ் (24). சற்று மனநலம் பாதிக்கப்பட்ட இவர், சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், கடந்த 7 மாதங்களுக்கு முன் பையாசின் தாய் இறந்து விட்டார். கடந்த சில நாட்களுக்கு முன் பையாஸ் திருப்பூர் மத்திய பேருந்து நிலையம் அருகே கடை ஒன்றில் வேலைக்கு சேர்ந்தார். அப்போது தாயை நினைத்து அடிக்கடி அழுது வந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை பையாஸ் கடைக்கு செல்லாமல் மத்திய பேருந்து நிலையம் எதிரில் உள்ள மேம்பாலத்திற்கு சென்று பாலத்தின் மீது ஏறி கீழே குதித்தார். இதில் அவர் உயிரிழந்தார்.

Related Stories: