மூலைக்கரைப்பட்டி, பரப்பாடி பகுதியில் இன்று மின்தடை

நெல்லை, மார்ச் 6: மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மூலைக்கரைப்பட்டி, பரப்பாடி, மூன்றடைப்பு பகுதிகளில் இன்று (6ம்தேதி) மின்தடை செய்யப்படுகிறது. இதுகுறித்து நெல்லை கிராமப்புற மின்வாரிய செயற்பொறியாளர் முத்தரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மூலைக்கரைப்பட்டி, கரந்தானேரி, மூன்றடைப்பு துணை மின்நிலையங்களில் இன்று (6ம் தேதி) மின் பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் துணை மின்நிலையங்களுக்கு உட்பட்ட பருத்திப்பாடு, மூலைக்கரைப்பட்டி, புதுகுறிச்சி, மருதகுளம், கோவைகுளம், முனைஞ்சிப்பட்டி, தாமரை செல்வி, காடான்குளம், சிங்கனேரி, அம்பலம், திடியூர், மூன்றடைப்பு, பானான்குளம், அம்பூர்ணி, தோட்டாக்குடி, பத்தினிப்பாறை, மருதக்குளம் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இதுபோல் பரப்பாடி துணை மின்நிலையத்தில் இன்று நடைபெறும் பராமரிப்பு பணிகள் காரணமாக பரப்பாடி, இலங்குளம், சடையனேரி, சவலைக்காரன்குளம், வில்லியனேரி, ஏமன்குளம், பெருமாள்நகர், கேர்க்கனேரி, காரன்காடு, தட்டான்குளம், கண்ணநல்லூர், துலுக்கர்பட்டி, பட்டர்புரம், மாவடி, முத்தலாபுரம், சித்தூர், சீயோன்மலை, தங்கயம், கண்ணாத்திகுளம் உள்ளிட்ட பகுதிகளில் மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: