சுயவேலைவாய்ப்பு, வருமானம் ஈட்ட சிறுபான்மையினர் கடன் பெற விண்ணப்பிக்கலாம்

திருப்பூர், ஜூன் 6: சுயவேலைவாய்ப்பு மற்றும் வருமானம் ஈட்ட சிறுபான்மையின மக்கள் கடன் பெற விண்ணப்பிக்கலாம் என்று திருப்பூர் மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். திருப்பூர் மாவட்ட கலெக்டர் மனிஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் சிறுபான்மையினர்களுக்கு சுய வேலைவாய்ப்பு மற்றும் வருமானம் ஈட்டுதலுக்கான செயல்பாடுகளுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் தனிநபர் கடன், சுய உதவி குழுக்களுக்கான சிறுதொழில்கடன், கைவினை கலைஞர்களுக்கான கடன் திட்டம் மற்றும் கல்விக்கடன் ஆகிய கடன் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

இந்த திட்டத்தின் கீழ் தனிநபர் கடன் ஆண்டுக்கு ரூ.20 லட்சமும், மற்றொரு திட்டத்தில் ரூ.30 லட்சம் வழங்கப்படுகிறது. கைவினை கலைஞர்களுக்கு அதிகபட்ச கடனாக ரூ.10 லட்சமும், சுய உதவிக்குழுவில் நபர் ஒருவருக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படுகிறது. இளங்கலை, முதுநிலை தொழிற்கல்வி, தொழில்நுட்ப கல்வி படிப்பவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.20 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. கைவினை கலைஞர்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் மூலப்பொருட்களுக்கான உபகரணங்கள், கருவிகள், எந்திரங்கள் வாங்குவதற்கு கடன் வழங்கப்படுகிறது. கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், புத்த மதத்தினர், சீக்கியர்கள், பார்சியர்கள் மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையின மக்கள் கடன் விண்ணப்பங்களை கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைபதிவாளர் அலுவலகம், மாவட்ட, மத்திய கூட்டுறவு வங்கி அல்லது அதன் கிளைகள் அல்லது நகர கூட்டுறவு வங்கி அல்லது தொடக்க வேளாண்மை கூட் டுறவு ஆகிய அலுவலகங்களில் பெற்று அதனை பூர்த்தி செய்து வங்கி உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டது.

Related Stories: